நீங்க மத்ஹபுகளை பின்பற்றுறீங்களா.?
ஆமாங்க...
பின்பற்ற என்ன காரணம்..?
(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)
நாங்கள் பாரம்பரியமா இந்த மத்ஹபுகளை தான் பின்பற்றுகிறோம் ..
அப்புறம்.....
நபிகளின் வழிமுறையை இலகுவாக்கி இமாம்கள் பின்பற்ற சொல்றாங்க. பின்பற்றுகிறோம்.
இதில் என்ன தவறு..?
என்பதோடு மட்டுமே முடித்துக்கொள்வார்கள்...
·
உண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது.,
?
·
இமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி?
·
இமாம்கள் உண்மையாக என்ன சொன்னார்கள்.. - என்று அலசவே
இக்கட்டுரை
மத்ஹபுகள் என்றால் வழிமுறை என்ற பொதுவான அர்த்தத்தில்
கையாளப்பட்டாலும். இவ்வார்த்தை 'தஹப' என்ற வேர்ச்சொல்லிருந்து உண்டானது. இதற்கு போக்கு அல்லது
கருத்து என பொருள்படும்.
அக்காலகட்டத்தில் தான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு
இமாம்களிடமிருந்து பெறப்படும் பதில்களை பொதுவில் வைத்து பிறரிடம் உரையாடும் போது
அக்கருத்தை மையப்படுத்த இது இன்னாரின் கருத்து (உம்: இது ஷாஃபி இமாமின் கருத்து)
என கூறுவதற்கு இவ்வார்த்தையை பயன்படுத்துவர். பின்னாளில் இது மாற்றமடைந்து மத்ஹபு
என்று நிலைப்பெற்றது.
பெரும்பான்மையானவர்களிடம் கேட்டால் மத்ஹபுகள் நான்கு என்றே
சொல்லுவர். அது தவறு. மத்ஹபுகள்
1. சைதி மத்ஹபு 2. அவ்சாயி மத்ஹபு 3. ழாஹிரி மத்ஹபு 4. லைதி மத்ஹபு 5. தவ்ரி மத்ஹபு 6. ஜரீரி மத்ஹபு
போன்றவைகளும் மத்ஹபுகளுக்குள் அடக்கம். எனினும் இவை காலப்போக்கில் தங்களை நிலை
நிறுத்திக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மூன்று அடிப்படை
காரணங்கள் பிரதானப்படுத்த படுகிறது அவை
1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக
இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல்
இருந்தது அல்லது பெயரளவில் மட்டும் அதை பின்பற்றியது - மற்றும்
3. மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக ஈடுபாடு
செலுத்தாமை.
இதுவே இம்மத்ஹபுகள் இன்று பெயரளவிற்கு மட்டும் நினைவில்
இருக்க காரணங்கள். அதுவல்லாமல் ஹனபி, ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் (ஹம்பலி) ஆகிய நான்கு மத்ஹபுகளே அதிக
அளவில் பின்பற்றப்படுகிறது(?) இவைகள் குறித்த
இமாம்களின் நிலை என்னவென்பதை பார்ப்போம்.
முதலில் இமாம்கள் வாழ்ந்த வருடங்கள் குறித்த காலக்குறிப்பை
காண்போம்:
மேற்கண்ட கணக்கீட்டில் ஹனபி இமாமே ஆரம்பமானவர் என்பதை
அறிய முடிகிறது. தமிழகத்தில் ஏனைய மத்ஹபுகளை விட ஹனபி மத்ஹபுகளை பின்பற்றுவோரே
அதிகம். அதாவது மத்ஹபுகளை பின்பற்றுவோரில் நான்கில் ஒருவர் ஹனபி மத்ஹபை
சார்ந்தவராவர்.
ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்)
அவர்களின் இயற்பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்). திருக்குர்-ஆனில் ஆழ்ந்த
ஞானமும், புலமையும் பெற்றிருந்த இமாமவர்கள் அந்நாளில்
குழப்பங்களின் கூடாரமான கூஃபாவில் வாழ்ந்ததால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை
தரம் பிரித்து தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் இருந்தார்கள்.
அதற்காகவே வாழ் நாளை செலவழித்தார்கள். இதில்
கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வாழ்நாளில் எந்த
ஒரு மார்க்க நூலையும் எழுதி வைக்கவே இல்லை.
ஆனால் இன்று ஹனபி மத்ஹபின் ஆதார நூல்களாக
முன்மொழியப்படும் நூற்களெல்லாம் இமாமவர்களின் மறைவிற்கு பின்னரே தொகுக்கப்பட்டன.
அதாவது
·
குத்ரி எனும் நூல் 300 வருடங்களுக்குப் பிறகும்,
·
ஹிதாயா மற்றும் காஜிகான் எனும் நூல்கள் சுமார் 400 வருடங்களுக்குப் பிறகும், கன்னியா சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும்,
·
தஹாவி, ஷரஹ் விகாயா, நிகாயா ,கன்ஜ் மற்றும் ஜாமிஉல்ருமூஸ் போன்ற நூற்கள் சுமார் 600 வருடங்களுக்குப் பிறகும்,
·
ஃபதாவே பஜாஸியா, பதாஉல் கதீர்
மற்றும் குலாஸத் கைதானி போன்ற நூற்கள் சுமார் 700 வருடங்களுக்குப் பிறகும்,
·
சல்பீ, தன்வீர் அப்ஸார், பஹ்ரு ராயின் மற்றும் தகீரா போன்ற நூற்கள் சுமார் 800 வருடங்களுக்குப் பிறகும்,
·
துர்ருல் முக்தார் சுமார் 900 வருடங்களுக்குப் பிறகும் இறுதியாக
·
.ஃபதாவா ஆலம்கீரி
இமாமவர்கள் மரணித்து 1000 வருடங்களுக்குப்
பின்னரே தொகுப்பட்டவைகளாகும்.
ஆக இமாமின் மறைவுக்கு பின்னர் சுமார் மூன்னூறு
ஆண்டுகளுக்கு பிறகே ஏனைய எல்லா நூற்களும் தொகுக்கப்பட்டன. எந்த நூலிலும்
இமாமிடமிருந்து எப்படி செய்திகள் சேகரிக்கப்பட்டன என்ற விபரமும் அவற்றை
அறிவித்தவர் வரிசை குறித்த தகவலும் இல்லவே இல்லை.
மேலும், ஹனபி மத்ஹபின் மிக
முக்கிய பிக்ஹு சட்ட நூல்களாக குறிப்பிடப்படும் துர்ருல் முக்தார் மற்றும் ஃபதாவா
ஆலம்கீரி ஆகிய இரண்டு நூற்களுக்கும் இமாமின் வாழ்வுக்கும் இடைப்பட்ட கால அளவு
சுமார் ஒரு நூற்றாண்டுகள் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் ஃபதாவா ஆலம்கீரி
எனும் நூல் மார்க்க ரீதியான தொடர்பற்று மெகலாய மன்னர் ஓளரங்கஷீப் காலத்தில்
தொகுக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆக தமது கருத்துக்கள் சமூகத்திற்கு அவசியமென
கருதியிருந்தால் தங்களது காலத்திலே தமது நூல்களை எழுதி இருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் பிறரையாவது எழுத
செய்திருப்பார்கள். ஆனால் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் வரலாற்றில்
எங்கேயும் தாமே எழுதியதற்கோ அல்லது பிறரை எழுத பணித்ததற்கோ ஆதாரங்கள் இல்லவே
இல்லை.
மேலும் இமாம் ஷாஃபி அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபி இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள்.இவர்களுள்
யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை. எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை
தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. ஏனெனில் அவர்களுக்கான தெரிதல்கள்
யாவற்றிற்கும் இறைவேதத்தையும் - தூதர் மொழியையும் சார்ந்திருந்தார்கள்.
எனினும் மத்ஹபு உருவாக்கங்கள் பிற்கால உலமாக்களால்
ஏற்படுத்தபட்ட வழிமுறை என்பதற்கு இன்னொரு சான்று பாருங்கள்.
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பிறகே
அவர்களது மாணவர்களால் அவர்களின் மீது கொண்ட அதீத பிரியம் காரணமாக பின்னாளில்
நூற்களாக தொகுக்கப்பட்டன. இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான
1.நூல் அல்மஜ்மூ
ஷரஹுல் முஹத்தப்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட
காலம் 427 வருடங்கள்
2.நூல் பத்ஹுல்
முயுன்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட
காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்
3.நூல் இஆனதுத்
தாலிபின்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட
காலம் 1062 வருடங்கள்
இடைப்பட்ட காலங்களை கவனிக்கும் போதே இந்நூல்களின்
நன்பகத்தன்மைக்குறித்து அதிகம் விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்...!
இதே நிலை தான் ஏனைய இமாம்களின் பெயரில் நிறுவப்பட்ட
மத்ஹபுகளிலும்.
ஆக நான்கு இமாம்களுக்கும் அவர்கள் பெயரால் இன்று
சமூகத்தில் நிலவும் மத்ஹபுகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. ஏனெனில் மேற்கண்ட
நூற்களை நன்கு ஆராய்ந்தால் முன்னுக்குப்பின் முரண், அல்லாஹ்வும் அவனது தூதரின் சொல்லுக்கும் மாறுபாடு, பகுத்தறிவிற்கு பொருந்தாத வாதங்கள்.
"இமாமுல் அஃலம்!
" தலை சிறந்த இமாம் (கள்) என அனைவராலும் இந்த சமூகத்தில் அறியப்பட்டவர்கள் எப்படி இப்படிப்பட்ட தவறான
கருத்துக்களை தருவார்கள்...?
சரி மத்ஹப் பற்றினால் அக்கருத்துக்கள் எல்லாம்
எங்களுக்கு ஏற்புடையவைகள் தான் என சொன்னாலும் அதே இமாம்கள் கூறிய செய்திகளையும்
கீழே பாருங்கள். நாற்பெரும் இமாம்கள் தங்களது சொல் / செயல் குறித்து என்ன
சொல்கிறார்கள் பாருங்கள்.,
1 – இமாம் அபூ ஹனிஃபா
(ரஹ்) கூறுகிறார்கள்:
اذا صح الحديث فهو مذهي
ஹதீஸ் சஹீஹாக (அதாரப்பூர்வமாக) கிடைக்கும் போது அதை
பின்பற்றுவதே எனது வழியாகும். (ஆதாரம்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன்,
பாகம் 1, பக்கம் 63, ரஸமுல் முப்தீ பாகம் 1, பக்கம் 4, ஈகாழுல் ஹிமம்
பக்கம் 62 )
يعلم من أين أخذناه لا يحل لأحد أن يأخذ بقولنا ما لم
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்
என்பதை அறியாமல் எனது சொல்லை
நடைமுறைப்படுத்துவது எவருக்கும் ஹலால்அன்று.
(ஆதாரம்:
அல்இன்திகா பக்கம் 145, ஹாஷியா இப்னுல்
ஆபிதீன்,
பாகம் 6, பக்கம் 293, ரஸமுல் முப்தீ பாகம் பக்கம் 29, 32 )
أن يفتي بكلامي
و في رواية حرام على من لم يعرف دليلي
என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என் சொல்லைக் கொண்டு ஃபத்வா கொடுப்பது ஹராமாகும். (ஆதாரம்: மீஸான்
ஷஃரானி பாகம் 1
பக்கம் 55 )
زاد في رواية فإننا بشر
فقول القول
اليوم و نرجع عنه غدا
நாங்கள் இன்று ஒரு சொல்லைச் சொல்லி விட்டு, நாளை அதைத்
திரும்பப் பெற்றுக் கொள்கின்ற மனிதர்கள்தாம்.
(ஆதாரம்: மீஸான்
ஷஃரானி பாகம் 1 பக்கம் 55 )
و في أخرى و يحك يا
يعقوب ‘هو أبو
يوسف‘ لا تكتب كل ما تسمع مني فإني قد
أرى الرأي اليوم و أتركه غدا و أرى
الرأي غدا و أتركه بعد غد
அபூ யூசுபே! என்னிடமிருந்து கேட்டவற்றை எல்லாம் எழுதி வைத்துவிடாதே, ஏனெனில் இன்று ஒரு
அபிப்பிராயத்தைக் கொண்டு (ஒரு தீர்ப்பை அளிப்பேன்) நாளை அதை விட்டுவிடுவேன், நாளை ஒரு அபிப்பிராயம் கொண்டு (தீர்ப்பு அளிப்பேன்) நாளை
மறுநாள் அதை (தீர்ப்பு அளித்ததை) விட்டு விடுவேன்.
(ஆதாரம்: இமாம்இப்னுல் மூயினுடைய ‘தாரிக்‘ பாகம்,பக்கம் 77 )
إذا قلت قولا يخالف
متاب الله تعالى
و خبر الرسول صلى الله عليه و سلم
فاتركو قولي
அல்லாஹ்வுடைய நெறி காட்டும் நூலுக்கும் நபி (ஸல்)
அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால், என் சொல்லைவிட்டு விடுங்கள். (ஆதாரம்:ஈகாழுல் ஹிமம் பக்கம் 50 )
2 – இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
إنما أنا بشر أخطيء و
أصيب فانظروا
في رأيي فكل ما وافق الكتاب و السنة
فخذوه و كل ما لم يوافق الكتاب و
السنة فاتركوه
1.நான் (சில
நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்)
தவறாகவும்
முடிவெடுக்கக் கூடிய சராசரி மனிதன்தான். எனது முடிவுகளை
நீங்களும் ஆராயுங்கள், குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை
எடுத்துக் கொள்ளுங்கள், குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
(ஆதாரம்: ஜாமிவு இப்னி அப்தில்பர்- பாகம் 2 பக்கம் 42, உஸூனுல்
அஹ்காம்-பாகம் 6 பக்கம் 149, ஈகாழுல் ஹிமம்-பக்கம் 62 )
ليس أحد بعد النبي صلى
الله عليه
و سلم إلا و يؤخذ من قوله و يترك
إلا النبي
2.நபி (ஸல்)
அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது
சொற்களிலும்,
எடுக்கத்தக்கவையும் உண்டு, விடப்படக்கூடியவையும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் சொல்
மட்டுமே முற்றாக பின்பற்றப் பட வேண்டியவை.
(ஆதாரம்: இர்ஷாதுஸ்ஸாலிக்-பாகம் 1 பக்கம்
227, ஜாமிவு இப்னி அப்தில்பர்-பாகம்
2 பக்கம் 91, உஸூலுல் அஹ்காம்-
பாகம் 6 பக்கம் 145 )
(இதே வார்த்தையை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக இமாம்
தகியுத்தீன் சுபக்கீ அவர்கள் தனது ‘ஃபதாவா‘வின் பாகம் 1 பக்கம்
148-ல் குறிப்பிடுகிறார்கள் )
قال ابن وهب سمعت مالكا
سئل عن تخليل
أصابع الرجلين في الوضوء؟ فقال ليس
ذلك على الناس قال فتركته حتى خف
الناس فقلت له عنجنا في ذلك سنة فقال
و ماهي؟ قلت حدثنا الليث بن سعد و
ابن لهيعة و عمرو بن الحارث عن يزيد
بن عمرو المعافري عن ابي عبدالرحمن
الحبلي عن المستورد بن شداد القرشي
قال رأيت رسول الله صلى الله عليه و
سلم يدلك يخصره ما بين أصابع رجليه
فقال إن هذا الحديث حسن و ما سمعت به
قط إلا الساعة ثم سمعته بعد ذلك يسأل
فيأمر بتخليل الأصابع
3.”ஒளூ செய்யும்போது
கால் விரல்களைக் கோதிக் கழுவ வேண்டியதில்லை” என்ற கருத்தை இமாம் மாலிக் அவர்கள்
கொண்டிருந்தார்கள். அப்போது நான் ”கால்களைக் கோதிக் கழுவ வேண்டும்” என்று ஹதீஸ்
உள்ளதாகக் கூறி அவர்களிடம் ஸனதுடன் அறிவித்தேன், அதற்கு இமாம் மாலிக் அவர்கள், ”இது சரியான ஹதீஸ்தான், நான் இதுவரைக்
கேள்விப்பட்டதில்லை” என்று கூறி விட்டு, அதன் பின்னால்
விரல்களையும் கோதிக் கழுவிவிட உத்தரவிட்டார்கள் என்று இப்னு வஹ்ப்(ரஹ்) அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்
(ஆதாரம்: அல்ஜர்ஹு
வத்தஃதீல் முன்னுரை பக்கம் 31,32 )
3 – இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்
ما من أحد إلا و تذهب
عليه سنة لرسول
الله صلى الله عليه وسلم و تعزب عنه
فمهما قلت من قول أو أصلت من أصل فيه
عن رسول الله صلى الله عليه و سلم
خلاف ما قلت فالقول ما قال رسول الله
صلى الله عليه و سلم و هو قولي
1.எவராக
இருந்தாலும் அவரை விட்டும் ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனம் (சில) தவறி
விடத்தான் செய்யும், நான் ஏதேனம் ஒரு சொல்லைச் சொல்லும் பொது அல்லது
ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத்தரும்போது. அல்லாஹ்வின்திருத்தூதருடைய
கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால்,ரசூல் (ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையாகும் ( ஆதாரம்: தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 பக்கம் 15, ஈகாழுல் ஹிமம்
பக்கம் 100 )
أجمع المسلمون على أن
من استبان له
سنة عن رسول الله صلى الله عليه و سلم
لم يحل له أن يدعها لقول أحد
2.ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை
எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால்
இல்லை என்று முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றுள்ளனர் (ஆதாரம்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 68 )
إذا وجدتم في كتابي
خلاف سنة رسول
الله صلى الله عليه و سلم فقولوا
بسنة رسول الله صلى الله عليه و سلم و
دعوا ما قلت ‘وفي رواية‘ فاتبعوها و
لا تلتفوا إلى قول أحد
3.எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துக்கு
மாற்றமானதைக் கண்டால் ரசூலுடைய சுன்னத்தையே (மக்களிடம்) சொல்லுங்கள், என் கூற்றை விட்டு விடுங்கள் (ஆதாரம்: அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்ககம்
63, இப்னு அஸாகிh 9,10,15, ஈகாழுல்ஹிமம்
பக்கம் 706, அல் இஹ்திஜாஜ் பகாம் 2 )
اذا صح الحديث فهو مذهي
4.ஆதரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும்போது அதைப் பின்பற்றுவதே எனது வழி (ஆதாரம்: அல்மஜ்மூவு (நவவீ) பாகம் 1 பக்கம்
63, மீஸான் ஷஃரானி பாகம் 1 பக்கம் 57, ஈகாழுல் ஹிமம் பக்கம் 107 )
(இதை நான்கு இமாம்களும் கூறியதாக இமாம் இப்னு ஹஸ்மு
அவர்களின்கூற்றை இமாம் ஷஃரானி பாகம் 1பக்கம் 57-ல் குறிப்பிடுகிறார்கள்)
أنتم أعلم بالحديث و
الرجال مني فغذا
كان الحديث الصحيح فأعلموني به أي
شيء يكون كوفيا أو بصريا أو شاميا
5.இமாம்அஹ்மது
இப்னு ஹன்பலை நோக்கி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள், ஹதீஸ்களையும், அதன்அறிவிப்பாளர்களையும்
நீங்கள்
நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்
என்றால் உடனே அதை எனக்கு அறிவித்து விடுங்கள்.(ஆதாரம்: ஆதாபுஷ்ஷாஃபியி பக்கம் 94,95, அபூ நயீமின் ஹில்யா பாகம் 9 பக்கம் 106, இப்னுல்
ஜவ்ஸியின் மனாகிபுல் இமாம், அஹ்மத் பக்கம் 499, அல் இன்திகா பக்கம் 75 )
كل مسألة صح فيها الخبر
عن رسول الله
صلى الله عليه و سلم عند اهل النقل
غلاف ما قلت فأنا راجع عنها في حياتي
و يعد موتي
நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம்
வந்துள்ள சட்டங்களுக்கு மாற்றமாக நான் சொன்ன அத்தனை சட்டங்களிலிருந்தும் நான்
வாழும் போதும் விலகிக் கொண்டேன். எனது மரணத்திற்குப் பின்னும் நான்விலகிவிட்டேன்
(நான் இதற்குப்பொறுப்பேற்க இயலாது)
(ஆதாரம்: ஹில்யா (அபூ
நயீம்) பாகம் 9 பக்கம், இஃலாமுல்மூகியீன்
பாகம் 2 பக்கம் 363, ஈகாழுல் ஹிமம்
பக்கம் 104 )
إذا رأيتموني أقول قولا
و قد صح عن
النبي صلى الله عليه و سلم خلافه
فاعلموا أن عقلي قد ذهب
நான் எதையாவது சொல்லி அது நபி (ஸல்) அவர்கள் கூற்றுக்கு
மாற்றமாக இருப்பின், அது என் அறிவுக்குறைவு எனப்புரிந்து கொள்ளுங்கள்(ஆதாரம்: இப்னு அஸாகிர் 1,10,15, அல்ஆதாப் (இப்னு அபீஹாதம்) பக்கம் 93, அபூ நயீம் பாகம் 9 பக்கம் 106 )
كل ما قلت؟ فكان عن
النبي صلى الله
عليه و سلم خلاف قولي مما يصح فحديث
النبي أولى فلا تقلدوني
நான் சொன்ன சொற்கள் ஆதாரபூர்வமான நபி மொழிக்கு
முரண்படும்போது , நபியின் ஹதீஸ்தான் ஏற்கத்தக்கது, என்னைப் பின்பற்றாதீர்கள்
(ஆதாரம்: அல்ஆதாப்
(இப்னு அபிஹாதம்) பக்கம் 93, அபூ நயீம் பாகம் 9, பக்கம் 106 )
كل حديث النبي صلى الله
عليه و سلم
فهو قولي و إن لم تسمعوه مني
நபி (ஸல்) அவர்கள் வாயிலாக வந்துள்ள எல்லா
ஹதீஸ்களும்தான் என் சொல்லாகும். என் மூலம் நீங்கள் அதைச் செவியுறாவிட்டாலும் சரியே (ஆதாரம்: அல் ஆதாப் (இப்னு அபீஹாதம்)
பக்கம் 93,94 )
4 – இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்.
لا تقلدني و لا تقلد
مالكا و لا
الشافعي و لا الوزعي و لا الثوري و خذ
من حيث أخذوا
என்னையோ, மாலிக், ஷாஃபியீ,அவ்ஸாயீ, ஸவ்ரீ (போன்ற இமாம்களையோ) பின்பற்றாதே,அவர்கள் எதிலிருந்து எடுத்துக் கொண்டார்களோ அதையே (அந்த
குர்ஆன், ஹதீஸிலிருந்து) நீயும் எடுத்துக்கொள்)
(ஆதாரம்: ஈகாழுல்
ஹிமம் பக்கம் 113 )
رأي الأوزعي و رأي مالك
و رأي أبي
حنيفة كله رأي و هو عندي سواء و إنما
الحجة في الاثار
அபூ ஹனீஃபா, மாலிக், அவ்ஜாயீ ஆகியோரின் கருத்துகள் அவர்களின் அபிப்பிராயமே, உண்மையான ஆதாரம் நபி தோழர்களின் சரியான அறிவிப்பில்தான்
உண்டு (ஆதாரம்: ஜாமிவு இப்னி அப்தில்பர் பாகம் 2
பக்கம் 149 )
من رد حديث رسول الله
صلى الله عليه و
سلم فهود على شفا هلكة
நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை நிராகரிப்பவன் அழிவின்
விளிம்பிலே இருக்கிறான் (ஆதாரம்: இப்னுல் ஜவ்ஸி பக்கம் 182, 30-32 )
எதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட
வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது. இமாம்களின் சொற்கள் இதுவென்று
வரையறையின்றி தெளிவில்லாதவற்றை நமக்கிடையில் வைத்திருக்கும் போது அந்த இமாம்களே
அவை பின்பற்ற உகந்ததல்ல என்று தெளிவாய் சான்று பகீர்கிறார்கள்.
உண்மையாக மேற்கண்ட இமாம்களின் மீது மதிப்பு
வைத்திருந்தால் அவர்களின் கூற்றுப்படி பின்பற்றுதல்கள் அனைத்தும் அல்லாஹ்வின்
வார்த்தையிலும் அண்ணாலாரின் வாழ்விலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து அந்த தூய
இமாம்கள் எதை பின்பற்றினார்களோ அந்த நபிவழி மத்ஹபை நாமும் பின்பற்றலாம் வாங்க....!
ஆமாங்க...
பின்பற்ற என்ன காரணம்..?
(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)
நாங்கள் பாரம்பரியமா இந்த மத்ஹபுகளை தான் பின்பற்றுகிறோம் ..
அப்புறம்.....
நபிகளின் வழிமுறையை இலகுவாக்கி இமாம்கள் பின்பற்ற சொல்றாங்க. பின்பற்றுகிறோம். இதில் என்ன தவறு..?
என்பதோடு மட்டுமே முடித்துக்கொள்வார்கள்...
மத்ஹபுகள் என்றால் வழிமுறை என்ற பொதுவான அர்த்தத்தில் கையாளப்பட்டாலும். இவ்வார்த்தை 'தஹப' என்ற வேர்ச்சொல்லிருந்து உண்டானது. இதற்கு போக்கு அல்லது கருத்து என பொருள்படும்.
அக்காலகட்டத்தில் தான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு இமாம்களிடமிருந்து பெறப்படும் பதில்களை பொதுவில் வைத்து பிறரிடம் உரையாடும் போது அக்கருத்தை மையப்படுத்த இது இன்னாரின் கருத்து (உம்: இது ஷாஃபி இமாமின் கருத்து) என கூறுவதற்கு இவ்வார்த்தையை பயன்படுத்துவர். பின்னாளில் இது மாற்றமடைந்து மத்ஹபு என்று நிலைப்பெற்றது.
பெரும்பான்மையானவர்களிடம் கேட்டால் மத்ஹபுகள் நான்கு என்றே சொல்லுவர். அது தவறு. மத்ஹபுகள்
1. சைதி மத்ஹபு 2. அவ்சாயி மத்ஹபு 3. ழாஹிரி மத்ஹபு 4. லைதி மத்ஹபு 5. தவ்ரி மத்ஹபு 6. ஜரீரி மத்ஹபு போன்றவைகளும் மத்ஹபுகளுக்குள் அடக்கம். எனினும் இவை காலப்போக்கில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மூன்று அடிப்படை காரணங்கள் பிரதானப்படுத்த படுகிறது அவை
1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் இருந்தது அல்லது பெயரளவில் மட்டும் அதை பின்பற்றியது - மற்றும்
3. மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக ஈடுபாடு செலுத்தாமை.
இதுவே இம்மத்ஹபுகள் இன்று பெயரளவிற்கு மட்டும் நினைவில் இருக்க காரணங்கள். அதுவல்லாமல் ஹனபி, ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் (ஹம்பலி) ஆகிய நான்கு மத்ஹபுகளே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது(?) இவைகள் குறித்த இமாம்களின் நிலை என்னவென்பதை பார்ப்போம்.
முதலில் இமாம்கள் வாழ்ந்த வருடங்கள் குறித்த காலக்குறிப்பை காண்போம்:
பாகம் 1, பக்கம் 63, ரஸமுல் முப்தீ பாகம் 1, பக்கம் 4, ஈகாழுல் ஹிமம்
பக்கம் 62 )
يعلم من أين أخذناه لا يحل لأحد أن يأخذ بقولنا ما لم
பாகம் 6, பக்கம் 293, ரஸமுல் முப்தீ பாகம் பக்கம் 29, 32 )
أن يفتي بكلامي و في رواية حرام على من لم يعرف دليلي
பக்கம் 55 )
اليوم و نرجع عنه غدا
يوسف‘ لا تكتب كل ما تسمع مني فإني قد
أرى الرأي اليوم و أتركه غدا و أرى
الرأي غدا و أتركه بعد غد
و خبر الرسول صلى الله عليه و سلم
فاتركو قولي
2 – இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
في رأيي فكل ما وافق الكتاب و السنة
فخذوه و كل ما لم يوافق الكتاب و
السنة فاتركوه
முடிவெடுக்கக் கூடிய சராசரி மனிதன்தான். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள், குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
அஹ்காம்-பாகம் 6 பக்கம் 149, ஈகாழுல் ஹிமம்-பக்கம் 62 )
و سلم إلا و يؤخذ من قوله و يترك
إلا النبي
எடுக்கத்தக்கவையும் உண்டு, விடப்படக்கூடியவையும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் சொல் மட்டுமே முற்றாக பின்பற்றப் பட வேண்டியவை.
227, ஜாமிவு இப்னி அப்தில்பர்-பாகம்
2 பக்கம் 91, உஸூலுல் அஹ்காம்-
பாகம் 6 பக்கம் 145 )
(இதே வார்த்தையை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக இமாம்
தகியுத்தீன் சுபக்கீ அவர்கள் தனது ‘ஃபதாவா‘வின் பாகம் 1 பக்கம்
148-ல் குறிப்பிடுகிறார்கள் )
أصابع الرجلين في الوضوء؟ فقال ليس
ذلك على الناس قال فتركته حتى خف
الناس فقلت له عنجنا في ذلك سنة فقال
و ماهي؟ قلت حدثنا الليث بن سعد و
ابن لهيعة و عمرو بن الحارث عن يزيد
بن عمرو المعافري عن ابي عبدالرحمن
الحبلي عن المستورد بن شداد القرشي
قال رأيت رسول الله صلى الله عليه و
سلم يدلك يخصره ما بين أصابع رجليه
فقال إن هذا الحديث حسن و ما سمعت به
قط إلا الساعة ثم سمعته بعد ذلك يسأل
فيأمر بتخليل الأصابع
3 – இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்
الله صلى الله عليه وسلم و تعزب عنه
فمهما قلت من قول أو أصلت من أصل فيه
عن رسول الله صلى الله عليه و سلم
خلاف ما قلت فالقول ما قال رسول الله
صلى الله عليه و سلم و هو قولي
கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால்,ரசூல் (ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையாகும் ( ஆதாரம்: தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 பக்கம் 15, ஈகாழுல் ஹிமம் பக்கம் 100 )
سنة عن رسول الله صلى الله عليه و سلم
لم يحل له أن يدعها لقول أحد
الله صلى الله عليه و سلم فقولوا
بسنة رسول الله صلى الله عليه و سلم و
دعوا ما قلت ‘وفي رواية‘ فاتبعوها و
لا تلتفوا إلى قول أحد
63, இப்னு அஸாகிh 9,10,15, ஈகாழுல்ஹிமம் பக்கம் 706, அல் இஹ்திஜாஜ் பகாம் 2 )
63, மீஸான் ஷஃரானி பாகம் 1 பக்கம் 57, ஈகாழுல் ஹிமம் பக்கம் 107 )
(இதை நான்கு இமாம்களும் கூறியதாக இமாம் இப்னு ஹஸ்மு அவர்களின்கூற்றை இமாம் ஷஃரானி பாகம் 1பக்கம் 57-ல் குறிப்பிடுகிறார்கள்)
كان الحديث الصحيح فأعلموني به أي
شيء يكون كوفيا أو بصريا أو شاميا
நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றால் உடனே அதை எனக்கு அறிவித்து விடுங்கள்.(ஆதாரம்: ஆதாபுஷ்ஷாஃபியி பக்கம் 94,95, அபூ நயீமின் ஹில்யா பாகம் 9 பக்கம் 106, இப்னுல் ஜவ்ஸியின் மனாகிபுல் இமாம், அஹ்மத் பக்கம் 499, அல் இன்திகா பக்கம் 75 )
صلى الله عليه و سلم عند اهل النقل
غلاف ما قلت فأنا راجع عنها في حياتي
و يعد موتي
النبي صلى الله عليه و سلم خلافه
فاعلموا أن عقلي قد ذهب
عليه و سلم خلاف قولي مما يصح فحديث
النبي أولى فلا تقلدوني
فهو قولي و إن لم تسمعوه مني
4 – இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்.
الشافعي و لا الوزعي و لا الثوري و خذ
من حيث أخذوا
حنيفة كله رأي و هو عندي سواء و إنما
الحجة في الاثار
பக்கம் 149 )
سلم فهود على شفا هلكة
எதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது. இமாம்களின் சொற்கள் இதுவென்று வரையறையின்றி தெளிவில்லாதவற்றை நமக்கிடையில் வைத்திருக்கும் போது அந்த இமாம்களே அவை பின்பற்ற உகந்ததல்ல என்று தெளிவாய் சான்று பகீர்கிறார்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.