Friday, 13 June 2014

லைலதுல் கத்ர் 27வது இரவா?

லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில்ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்குஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம்ஆனால்ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு,ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரியவிழாவாகக் கொண்டாகிறார்கள்இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம்உள்ளதாஎன்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானதுஇருபத்தேழாவது இரவு தான் என்றுநபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:  முஆவியா (ரலி),

நூல்அபூதாவூத் (1178)

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர்இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.


இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான்என்று முடிவு செய்யலாம்ஆனால் இதற்கு மாற்றமாக நாம்முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பதுநபி (ஸல்அவர்களுக்கே மறக் கடிக்கப்பட்டுள்ளது என்றுதெளிவாகக் குறிப்பிட்டு விட்டுகடைசிப் பத்தின் ஒற்றைநாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்மேலும் 27 என்றுகுறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளதுஅவற்றைபாருங்கள்.

ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப்பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்அவர்களிடம் கேட்டார்கள்.அதற்கு நபி (ஸல்அவர்கள் 23வது இரவு என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி),
நூல்அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும்குறிப்பிட்டும் வந்துள்ளது.

"ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரைதேடுங்கள்லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில்,இருபத்தி மூன்றாவது இரவில்இருபத்தி ஐந்தாவது இரவில்தேடுங்கள்'' என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும்குறிப்பிட்டும் வந்துள்ளது.

"லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளதுஅதைஇருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவதுஇரவிலோ தேடுங்கள்'' என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்புகாரி 2022

இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்துஎன்னஎன்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவானவிடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்அவர்கள் கூறியதற்கு விளக்கம்அளித்த இமாம் ஷாஃபி அவர்கள்

"நபியவர்கள் கேட்கப்படும்கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். "இந்தஇரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?' என்றுகேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள்என்றுபதிலளித்திருப்பார்கள்'' என்று கூறுகிறார்கள்.
நூல் : திர்மிதீ 722



அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரைதேடலாமா
என்று கேட்டிருப்பார்அப்போது நபி (ஸல்அவர்கள்"ஆம்,
21 வது இரவில் தேடுங்கள்என்று கூறியிருப்பார்கள்.
இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா என்று கேட்டிருப்பார்அப்போது நபி (ஸல்அவர்கள் "ஆம், 23வதுஇரவில் தேடுங்கள்என்று கூறியிருப்பார்கள்
இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள்
அதற்கு ஏற்ற வாறு நபி (ஸல்அவர்கள் பதிலளித்திருப்பார்கள்.  எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம்பெற்று இருக்கிறதுஇந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.